Posts

கடவுள் வாழ்த்து

  கடவுள் வாழ்த்து பால்:  அறம்.  இயல்:  பாயிரம்.  அதிகாரம்:  கடவுள் வாழ்த்து. குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்ப

திருக்குறள் உரை பொருளடக்கம்

அறத்துப்பால் பாயிரவியல் ·          001. கடவுள் வாழ்த்து ·          002. வான்சிறப்பு ·          003. நீத்தார் பெருமை ·          004. அறன்வலியுறுத்தல்   இல்லறவியல் ·          013. அடக்கமுடைமை ·          014. ஒழுக்கமுடைமை ·          015. பிறனில் விழையாமை ·          016. பொறையுடைமை ·          017. அழுக்காறாமை ·          018. வெஃகாமை ·          019. புறங்கூறாமை ·          020. பயனில சொல்லாமை ·          021. தீவினையச்சம் ·          022. ஒப்புரவறிதல் ·          023. ஈகை ·          024. புகழ் ·              துறவறவியல் ·          025. அருளுடைமை ·          026. புலான்மறுத்தல் ·          027. தவம் ·          028. கூடாவொழுக்கம் ·          029. கள்ளாமை ·          030. வாய்மை ·          031. வெகுளாமை ·          032. இன்னாசெய்யாமை ·          033. கொல்லாமை ·          034. நிலையாமை ·          035. துறவு ·